நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

2


சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 03) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ






ஹோமோசெக்ஸ்; 4 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர், சீனிவாசபுரம் குளத்தில், ஏப்., 25, மதியம் 13, 12 வயதில் இரு சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த ராகுல், 18, அவரது நண்பர்களான 17, 15, 14, 15, வயது சிறுவர்கள் என, மொத்தம் ஐந்து பேரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள், இரு சிறுவர்களை அடித்து, ஹோமோ செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளனர். 'இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம்' என மிரட்டி சென்றனர். இரு சிறுவர்களும் மனசோர்வாக இருந்துள்ளனர். கண்காணித்த சிறுவர்களின் பெற்றோர் விசாரித்தனர்.

அப்போது, தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வல்லம் மகளிர் எஸ்.ஐ., அபிராமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.

ராகுல் மற்றும் நான்கு சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராகுலை சிறையிலும், சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

ஆந்திர முதியவருக்கு காப்பு

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரத்தினம், 60. இவர், பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை பஸ் ஸ்டாப் அருகே உள்ள பகுதியில் வசிக்கிறார். நேற்று முன்தினம் மாலை, பெரம்பலுார் பஸ் ஸ்டாண்டில், பஸ்சுக்காக நின்ற, 14 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்தார். சிறுமி தந்தை புகாரில், பெரம்பலுார் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து ரத்தினத்தை கைது செய்தனர்.


சில்மிஷ வாலிபருக்கு சிக்கல்



ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாராஞ்சியை சேர்ந்தவர் அகத்தியன், 25. சோளிங்கர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, 16 வயது இரு மாணவியர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மாலை நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அகத்தியன், மாணவியரின் இடுப்பை கிள்ளியும், கையை பிடித்து இழுத்தும் பாலியல் தொல்லை கொடுத்தார். சோளிங்கர் போலீசார் விசாரித்து, அகத்தியனை போக்சோவில் கைது செய்தனர்.

மகளை சீரழித்த தந்தை கைது




கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையைச் சேர்ந்த 43 வயதான நபருக்கு, 14 வயதில், எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். தற்போது சிறுமியின் குடும்பத்தினர் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வசிக்கின்றனர்.


சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. பத்தனம்திட்டா போலீசார் விசாரணையில், சிறுமியின் தந்தையே மகளை பலாத்காரம் செய்தது தெரிந்தது. அவரது தந்தையை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement