தி.மு.க., மா.செ.,க்கள் செல்வாக்கு; கடிவாளம் போட்ட முதல்வர்

5

சென்னை: தி.மு.க.,வில் கட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, ஆட்சிக்கான தேர்தலாக இருந்தாலும் சரி, களத்தில் யார் நிற்க வேண்டும்; யார் விலகி நிற்க வேண்டும் என்பதை, கட்சியின் மாவட்ட செயலர்களே முடிவு செய்வர்.

ஆனால், இம்முறை 'களத்தில் யாரை இறக்கு வது என்பதை மேலிடம் முடிவு செய்யும்' என, முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாக கூறி யிருக்கிறார். அதாவது, உங்களுக்கு கொடுக்கப் பட்ட வேலையை மட்டும் நீங்கள் பார்த்தால் போதும் என சொல்லி இருக்கிறார்.


கடந்த 2021 சட்டசபை தேர்தலில், வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், சிலரை மாற்றச் சொல்லியும், மாவட்ட செயலர்களின் விருப்பத் திற்கே முதல்வர் முன்னுரிமை அளித்தார். 'இந்த முறை வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி தலைமையே முடிவு செய்யும். வெற்றி வாய்ப்பும், தகுதியும் இருப்பவர்களே நிறுத்தப்படுவர்.



அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது மட்டுமே, உங்களின் வேலை' என்று, மா.செ.,க்களுக்கு கடிவாளம் போட்டிருக்கிறார். வெற்றி பெற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ள ஸ்டாலின், எதற்கும் தயாராக உள்ளவர்களையே வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement