சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி; பிரதமர் லாரன்ஸ்க்கு மோடி வாழ்த்து!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அக்கட்சியின் லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். தொடர்ந்து 60 ஆண்டுகளாக ஆளும் கட்சி ஆட்சியை பிடித்து வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்குக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்கை வாழ்த்துகிறேன்.
இந்தியாவும், சிங்கப்பூரும் வலுவான உறவுகளை கொண்டுள்ளது. இருநாட்டு மக்களும் உறவுகளை கொண்டு உள்ளனர். சிங்கப்பூருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேலும்
-
3 தலைமுறையாக ஆசிரியர் பணி; மூத்தவர்களை கவுரவித்து விழா எடுத்த பேரன், பேத்திகள்
-
பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்
-
சென்னை ஓட்டலில் மட்டன் குழம்பில் தவளை... வாடிக்கையாளர் அதிர்ச்சி
-
காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது; ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
இந்தியாவில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எக்ஸ் கணக்கு முடக்கம்
-
நீட் தேர்வு துவங்கியது; நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்பு