பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்தி விடாதீர்கள் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் கரண் சிங் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, முன்னாள் கவர்னரும், ஜம்மு காஷ்மீர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவருமான கரண் சிங் கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் துயரமானது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் அனைவரையும், குறிப்பாக காஷ்மீர் மக்களை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு, 3 கோடி மக்கள் பஹல்காமிற்கு சுற்றுலா வருவார்கள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் இந்தத் தாக்குதல் அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.
பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்தி விடாதீர்கள். பஹல்காமிற்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருமாறு அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் எவ்வளவு பயப்படுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி விடும். இவ்வாறு அவர் கூறினார்.







மேலும்
-
36 இலக்கத்தில் வங்கி கணக்குக்கு வந்த பணம்; எலான் மஸ்கை ஓரம்கட்டிய உ.பி. விவசாயி
-
இந்தியா போர் தொடுத்தால் இங்கிலாந்துக்கு பறந்துவிடுவேன்; சொல்கிறார் பாகிஸ்தான் எம்.பி.,
-
இந்தியாவை வென்றது இலங்கை: பெண்கள் ஒருநாள் போட்டியில்
-
அரசு தேர்வில் தோல்வியுற்ற மகன்; ஆச்சர்யம் அளித்த பெற்றோர் செயல்!
-
அன்குர், அபினாத் ஜோடி தங்கம்: 'யூத்' டேபிள் டென்னிசில்
-
பெண்கள் ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி