தோல்வி பயத்தில் பா.ஜ., கூட்டணி பற்றியே எப்போதும் பேசுகிறார் ஸ்டாலின்; நயினார் நாகேந்திரன் பேட்டி

திருநெல்வேலி: ''முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை பற்றியே பேசி வருகிறார்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து நிருபர்களுக்கு நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் வயதான தம்பதி கொலை மற்றும் திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கொலை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சான்று. இந்த கொலை வழக்கில் இன்று வரை தீர்வு காணவில்லை. முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை பற்றியே பேசி வருகிறார்.
மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். திருநெல்வேலியில் குடிக்க தண்ணீர் இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. இதில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அக்கறை காட்டாமல், தேர்தல் கூட்டணியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்
அடுத்த ஓராண்டு தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள், அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது, கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை என்பதையே எடுத்துரைக்கிறது. கவர்னரை பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்துவிட்டு, தற்போது கவர்னரிடம் அதிகார போட்டி இல்லை என்று முதல்வர் சொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
வாசகர் கருத்து (8)
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
04 மே,2025 - 13:52 Report Abuse

0
0
Reply
thottijaya - ,
04 மே,2025 - 13:47 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04 மே,2025 - 13:13 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04 மே,2025 - 13:12 Report Abuse

0
0
Reply
Kumar - ,
04 மே,2025 - 13:08 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
04 மே,2025 - 12:56 Report Abuse

0
0
velraj - ,
04 மே,2025 - 13:46Report Abuse

0
0
Reply
மேலும்
-
3 தலைமுறையாக ஆசிரியர் பணி; மூத்தவர்களை கவுரவித்து விழா எடுத்த பேரன், பேத்திகள்
-
பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்
-
சென்னை ஓட்டலில் மட்டன் குழம்பில் தவளை... வாடிக்கையாளர் அதிர்ச்சி
-
காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது; ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
இந்தியாவில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எக்ஸ் கணக்கு முடக்கம்
-
நீட் தேர்வு துவங்கியது; நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்பு
Advertisement
Advertisement