உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பபெட் ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு; யார் இவர் தெரியுமா?

1

வாஷிங்டன்: உலகப் புகழ்பெற்ற முதலீட்டு ஜாம்பவான் வாரன் பபெட், இந்த ஆண்டு இறுதியில் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.


உலகப் பெரும் பணக்காரர்களின் ஒருவரும், 'ஹாத்வே' முதலீட்டு நிறுவனத் தலைவருமான வாரன் பபெட், தனது 'பெர்க்ஷயர்' நிறுவன பங்குகளில் பாதிக்கு மேல் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்தவர். பங்குச்சந்தை பிதாமகன் என அறியப்படும் முதலீட்டாளர் வாரன் பப்பெட் மந்தநிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த மதிப்புமிக்க அனுபத்தை பல ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளார்.


இவர் பங்குச்சந்தையை நன்கு கணித்து முதலீடு செய்து அதிக லாபத்தை சம்பாதித்தவர். இவரை பின்பற்றி பலர் முதலீடு செய்வதும் உண்டு. ஆனால் இவரைப் போல் கணித்து யாராலும் முதலீடு செய்து லாபம் பெற முடியாது. அந்த அளவுக்கு பங்குச்சந்தையில் அதிக அனுபவம் கொண்டவர் என்பது நாம் எல்லாரும் அறிந்தவை. 94 வயதாகும் வாரன் பபெட்டின் மொத்த சொத்து மதிப்பு, 12.35 லட்சம் கோடி ரூபாய். இவர் இளம் முதலீட்டாளர்களுக்கு பல முக்கிய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.


இவரது பாதையைப் பின்பற்றி, இவரது அறிவுரையை கேட்டு பங்குச்சந்தையில் சாதித்த இளம் முதலீட்டாளர்களும் ஏராளமானோர் உண்டு. இவர் இந்த ஆண்டு இறுதியில் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு, ஒமாஹா நகரில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பங்குதாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வாரன் பபெட் நிறுவனத்தின் ஆண்டு இறுதி கூட்டத்தில் பேசியதாவது:
கிரெக் ஏபெல் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். இந்தாண்டு இறுதியில் ஓய்வு பெற போகிறேன். இவ்வாறு அவர் பேசினார். 94 வயதிலும் முதலீட்டாளர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த வாரன் பபெட் திடீரென ராஜினாமா செய்ய முடிவு எடுத்திருப்பது அனைவரும் மத்தியிலும் பேசும் பொருள் ஆகியுள்ளது.

யார் இந்த கிரெக் ஏபெல்?

தனது இடத்திற்கு முதலீட்டாளர் ஜாம்பவான் வாரன் பபெட் கைகாட்டிய கிரேக் ஏபெல் குறித்து விபரம் பின்வருமாறு:

கனடாவைச் சேர்ந்தவரான கிரெக் ஏபெல், 2000ம் ஆண்டு பெர்க்ஷயர் குழுமம் மிட்அமெரிக்கன் எனர்ஜியை வாங்கியபோது அவர் வாரன் பபெட்டின் பெர்க்ஷயரில் இணைந்தார்.

பெர்க்ஷயர் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். படிப்படியாக உயர்ந்து 2008ல் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

இவர் முதலீட்டாளர் வாரன் பபெட் போல், நன்கு கணித்து, பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதித்து நிறுவனத்தின் சொத்து மதிப்பை உயர்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

Advertisement