பாக்.,கிற்கு எதிராக காய் நகர்த்தும் இந்தியா: பக்லிஹார் அணை தண்ணீர் நிறுத்தம்

11

புதுடில்லி; பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையின் முக்கிய கட்டமாக பக்லிஹார் அணை தண்ணீரை இந்தியா நிறுத்தி உள்ளது.



பஹல்காம் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்களுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.


60 ஆண்டுகளாக இருந்த இந்த ஒப்பந்தம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது, பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


இந் நிலையில், அடுத்த நடவடிக்கையாக செனாப் நதியில் உள்ள பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இது தவிர, ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையிலும் இதே போன்றதொரு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


பக்லிஹார் அணை ராம்பன் மாவட்டத்திலும், கிஷன்கங்கா வடக்கு காஷ்மீரிலும் உள்ளது. இந்த அணைகளின் நீர் வெளியேற்ற நேரத்தை ஒழுங்குபடுத்தும் அனுமதி மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement