விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஷீரடியில் குடிபோதை பயணி கைது

7

புதுடில்லி: டில்லியிலிருந்து ஷீரடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. விமானம் தரையிறங்கியதும் போதை பயணி கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து ரஹாட்டா போலீசார் கூறியதாவது:

இந்த சம்பவம் கடந்த மே.2 ஆம் தேதி நடந்தது.டில்லியிலிருந்து ஷீரடி செல்லும் விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான எண் 6ஏ 6403 இல் நடந்தது. விமானம் ஷீரடியில் தரையிறங்கிய பிறகு, விமான நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் அந்த பயணி சந்தீப் சுமேர் சிங் என்பதும் அவர் ஒரு ராணுவ வீரர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பயணி விமானப் பணிப்பெண்ணை வேண்டுமென்றே இரண்டு முறை தொட்டு, அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement