இந்தியாவில் இறக்கப்பட்ட ரஷ்ய ஏவுகணை; துல்லியமாக தாக்கும் என்பதால் பதற்றத்தில் பாக்.,!

7

புதுடில்லி: ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் வாங்கியது. துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பதால் பாகிஸ்தான் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


@1brகாஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகிறது. தாக்குதல் ஒத்திகை, புதிய ரக போர் கருவிகள் இணைப்பு என முழு வீச்சில் நவீனமயமாக்கபட்டு வருகிறது.


பாக்., பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க ஆயுதங்களை இந்திய ராணுவம் வாங்கி குவித்து வருகிறது. அதே நேரத்தில் தாங்கள் வலுவாக இருப்பது போல் காட்ட, ஏவுகணை சோதனை நடத்தி நாட்டு மக்களை பாகிஸ்தான் ராணுவம் ஏமாற்றி வருகிறது.

இந்த சூழலில், இப்போது குறைந்த தூர இலக்குகளை தாக்க கூடிய இக்லா-எஸ் என்கிற சிறிய ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெற்றுள்ளது.


அவசரகால கொள்முதல் அதிகாரங்களின் கீழ் கையெழுத்திடப்பட்ட 260 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் மூலம் இது கிடைத்துள்ளது. இந்திய ராணுவத்தின் பலத்தை இக்லா-எஸ் ஏவுகணை அதிகரிக்கும். துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பதால் பாகிஸ்தான் ராணுவம் பீதி அடைந்துள்ளது.

Advertisement