அன்குர், அபினாத் ஜோடி தங்கம்: 'யூத்' டேபிள் டென்னிசில்

பாங்காக்: 'யூத் ஸ்டார் கன்டெண்டர்' டேபிள் டென்னிசில் இந்தியாவின் அன்குர், அபினாத் ஜோடி தங்கம் வென்றது.
தாய்லாந்தில், 'யூத் ஸ்டார் கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, அபினாத் பிரதாவதி ஜோடி, தென் கொரியாவின் லீ ஜங்மோக், சோய் ஜிவூக் ஜோடியை எதிர்கொண்டது. கலக்கலாக ஆடிய இந்திய ஜோடி 3-1 (11-7, 8-11, 11-8, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பட்டத்தை தட்டிச் சென்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவு (19 வயது) பைனலில் இந்தியாவின் சின்ட்ரெலா தாஸ், திவ்யான்ஷி போவ்மிக் ஜோடி 1-3 (7-11, 15-13, 1-11, 10-12) என தாய்லாந்தின் விராகர்ன் தயாபிடக், பாட்சரபோன் வோங்லாகோன் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.
பின், 15 வயதுக்குட்பட்ட பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ரியானா, அனன்யா ஜோடி வெள்ளி வென்றது. பெண்கள் ஒற்றையரில் (15 வயது) இந்தியாவின் திவ்யான்ஷி போவ்மிக் வெள்ளி வென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 3 வெள்ளி என 4 பதக்கம் கிடைத்தது.