பெண்கள் ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி

பெர்த்: ஐந்தாவது ஹாக்கி போட்டியில் எழுச்சி கண்ட இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியிடம் தோல்வியடைந்த இந்தியா, 4வது போட்டியில் சீனியர் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.
பெர்த்தில் நடந்த கடைசி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement