அரசு தேர்வில் தோல்வியுற்ற மகன்; ஆச்சர்யம் அளித்த பெற்றோர் செயல்!

பாகல்கோட்: அரசு தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவனுக்கு பெற்றோர் விருந்து வைத்து ஊக்கப்படுத்தியது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் பாகல்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மாணவரான அபிஷேக், மாநில வாரியத் தேர்வில் 625 மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று அனைத்து பாடங்களிலும் குறைவான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறவில்லை.
இருந்த போதிலும் அந்த மாணவனின் பெற்றோர், மகனை கண்டிப்பதற்கு பதிலாக, அடுத்த முயற்சியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, மகனுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு, கேக் மற்றும் இனிப்புகளை ஆர்டர் செய்தனர். தங்கள் மகன் தோல்வியடைந்ததைக் கொண்டாட, அவரது நேர்மையான முயற்சிகளை அங்கீகரிக்கும் ஒரு வழியாக ஒரு விருந்தை நடத்தினர்.
மாணவனின் தந்தை கூறுகையில், எங்களுடைய மகன் அபிஷேக் நேர்மையாகப் படித்து, தேர்வுகளை எதிர்கொண்டான். இதனால் அவனை உற்சாகப்படுத்தவும், அடுத்த முயற்சியில் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கவும் முயற்சி செய்தோம். அடுத்த முயற்சியில் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்று கூறியிருக்கிறான் என்றார்.
மேலும்
-
கோல்கட்டா அணி 'திரில்' வெற்றி: ஒரு ரன்னில் ராஜஸ்தானை வீழ்த்தியது
-
பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது லக்னோ: பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அபாரம்
-
சூறைக்காற்றில் விழுந்தது மின் விளக்கு கம்பம்; தப்பினார் திமுக எம்.பி., ராஜா
-
மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் விபத்து: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு
-
நீட் ரத்து ரகசியம் என பேசி சவடால்: தி.மு.க.,வை தாக்கிய இ.பி.எஸ்.
-
பிளாக் அவுட் பயிற்சியில் இந்திய ராணுவம்; அச்சத்தில் பாகிஸ்தான்