தினமலர் இணை நிர்வாக ஆசிரியருக்கு உதயகுமார் வாழ்த்து

மதுரை: இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை ஜனாதிபதியிடமிருந்து பெற்ற தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதிக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பட்டு சால்வை அணிவித்து பொக்கே கொடுத்து வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் தினமலர் வெளியீட்டாளர் டாக்டர். எல். ராமசுப்பு மற்றும் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் உள்ளனர்.

Advertisement