அக்னி தொடங்கிய முதல்நாள்; சென்னையில் கொட்டிய கனமழை

சென்னை: சென்னையில் சூறைக்காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.


@1brஅக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தியது. தலைநகர் சென்னையிலும் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.


இந் நிலையில் பிற்பகலுக்கு பின்னர் சென்னையின் கால நிலையில் திடீரென மாற்றம் காணப்படுகிறது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் நகரின் பல பகுதிகளில் சூறைக்காற்றுட்ன் கனமழை கொட்டி வருகிறது.


ஈக்காட்டுத் தாங்கல், தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, பெரம்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, எழும்பூர், வேப்பேரி என நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.


ஆவடி, அம்பத்தூர், எண்ணூர், காசிமேடு, வண்டலூர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், முடிச்சூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளையும் மழை விட்டு வைக்கவில்லை. சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியதால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

Advertisement