திருப்போரூர்-- எஸ்.பி.கோவில் பேருந்து விட கோரிக்கை
திருப்போரூர்:திருப்போரூரில் கந்தசுவாமி கோவில், சிங்கபெருமாள் கோவிலில், பல்லவர்கால பெருமாள் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இரு கோவில்களிலும், விசேஷ நாட்களில் கூட்டம் அலைமோதும். இரு ஊர்களிடையே உள்ள அனுமந்தபுரத்தில், திருவிளையாடல் புராணத்தை நினைவூட்டும், அகோர வீரபத்ரர் கோவிலும் உள்ளது. இக்கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்போரூரில் இருந்து கொட்டமேடு, கரும்பாக்கம், சென்னேரி, அனுமந்தபுரம் வழியாக சிங்கபெருமாள்கோவில், 27 கி.மீ., உள்ளது. இத்தடத்தில் பேருந்து இயக்கினால், திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியினர், விரைவாக, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஊர்களுக்கு செல்ல முடியும்.
இந்த தடத்தில், பேருந்து இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
'நீட் தேர்வு கடந்தாண்டை விட கடினம்'; இயற்பியலில் சிரமம் என பேட்டி
-
தோட்ட வீடுகளில் போலீசார் ஆய்வு
-
100 ஆண்டு அரச மரத்துக்கு புது வாழ்வு; வேரோடு தோண்டி வேறு இடத்தில் நடப்படுகிறது
-
காவல் உதவி செயலி: போலீசார் பிரசாரம்
-
பல்லடத்திலிருந்து உக்கடத்துக்கு பஸ் இயக்க கோரிக்கை
-
வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்