'கேலோ' வாலிபால்: தமிழகம் கலக்கல்

பாட்னா: 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டுக்கான வாலிபால் போட்டியில் தமிழக பெண்கள் அணி வெற்றி பெற்றது.
பீஹாரில், 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான வாலிபால் 'பி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழக அணி 3-0 (25-13, 25-11, 25-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 'ஏ' பிரிவு போட்டியில் மேற்கு வங்க அணி 3-0 (25-9, 25-7, 25-9) என பீஹாரை வென்றது.


ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஒரு கட்டத்தில் 1-2 என பின்தங்கி இருந்த ஜம்மு காஷ்மீர் அணி, பின் எழுச்சி கண்டு 3-2 (18-25, 25-20, 16-25, 27-25, 15-9) என உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது. 'பி' பிரிவு போட்டியில் குஜராத் அணி 3-1 (25-12, 18-25, 25-18, 25-19) என கேரளாவை வென்றது.

கபடி: ஆண்களுக்கான கபடி லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, கர்நாடகா அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் 28-14 என முன்னிலையில் இருந்த ஹரியானா, ஆட்டநேர முடிவில் 57-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பெண்களுக்கான லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஹரியானா அணி 33-32 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

வில்வித்தை 'ரேங்கிங்' போட்டிகளில் மஹாராஷ்டிரா நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

Advertisement