நீட் ரத்து ரகசியம் என பேசி சவடால்: தி.மு.க.,வை தாக்கிய இ.பி.எஸ்.

சென்னை; ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள் என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது என என்று நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
"ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்" என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது?
உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?
"நீட் ஒழிய வேண்டும் என்றால் '2.0' வர வேண்டும்" என்று கூச்சமின்றி தி.மு.க.,வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, "உரிய மரியாதையுடன்" மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை, மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
இவ்வாறு இ.பி.எஸ்., கூறி உள்ளார்.
மேலும்
-
தேடப்பட்ட கேரள வாலிபர் சென்னை ஏர்போர்ட்டில் கைது
-
நவீன நிழற்குடைகளால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு பஸ் பயணியர் அதிருப்தி
-
அரைகுறை மழைநீர் வடிகால்வாய் பணி திருவொற்றியூர் மேற்கில் வெள்ள அபாயம்?
-
குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பால் கதவுகளை திறந்து வைக்க முடியாமல் தவிப்பு
-
ஆட்டுக்கறி குழம்பில் தேரை ஹோட்டலுக்கு ௶'சீல்' வைப்பு
-
கிண்டி முதியோர் நல மருத்துவமனை கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்