ராணுவ அணி வீரருக்கு தங்கம்: துப்பாக்கி சுடுதலில் அசத்தல்

போபால்: துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் ராணுவ அணியின் கேதர்லிங் பாலகிருஷ்ணா தங்கம் வென்றார்.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில், 23வது குமார் சுரேந்திர சிங் நினைவு தேசிய துப்பாக்கி சுடுதல் ('பிஸ்டல்') சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்திய ராணுவ அணியின் கேதர்லிங் பாலகிருஷ்ணா, 244.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மற்றொரு ராணுவ அணி வீரர் அஜய் குமார் அம்பாவத் (244.1 புள்ளி), இந்திய கடற்படை அணியின் உஜ்ஜாவல் மாலிக் (222.2) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.


ஜூனியர் பிரிவில் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') சண்டிகரின் தைரிய பிரஷார் (241.6 புள்ளி) தங்கம் வென்றார். ராஜஸ்தானின் சந்தீப் பிஷ்னோய், ஹரியானாவின் கபில் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

'யூத்' பிரிவில் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') மத்திய பிரதேசத்தின் யுக்பிரதாப் சிங் ரத்தோர், தைரிய பிரஷார் (சண்டிகர்), உ.பி.,யின் சிராக் சர்மா முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

Advertisement