பார்வ் சவுத்ரி 'வெண்கலம்': உலக 'யூத்' பளுதுாக்குதலில்

லிமா: உலக 'யூத்' பளுதுாக்குதலில் இந்தியாவின் பார்வ் சவுத்ரி வெண்கலம் வென்றார்.
பெருவில், உலக 'யூத்', ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடந்தது. 'யூத்' ஆண்களுக்கான 96 கிலோ பிரிவு இந்தியாவின் பார்வ் சவுத்ரி 17, பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 140, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 175 என, ஒட்டுமொத்தமாக 315 கிலோ பளுதுாக்கிய பார்வ், 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். உ.பி.,யை சேர்ந்த இவர் 2 தேசிய சாதனை படைத்தார். கடந்த ஆண்டு 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 171 கிலோ பளுதுாக்கி தேசிய சாதனை படைத்த பார்வ் சவுத்ரி, ஒட்டுமொத்தமாக 311 கிலோ துாக்கியது தேசிய சாதனையானது.
ஆண்களுக்கான 61 கிலோ பிரிவில் ஒட்டுமொத்தமாக 245 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் சுனில் சிங், 6வது இடம் பிடித்தார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 3 வெண்கலம் கிடைத்தது. ஏற்கனவே இந்தியாவின் ஜோஷ்னா சபர் (பெண்கள் 40 கிலோ), ஹர்சபர்தன் சாஹு (ஆண்கள் 49 கிலோ) தலா ஒரு வெண்கலம் கைப்பற்றினர்.
மேலும்
-
சூறைக்காற்றில் விழுந்தது மின் விளக்கு கம்பம்; தப்பினார் திமுக எம்.பி., ராஜா
-
மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் விபத்து: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு
-
நீட் ரத்து ரகசியம் என பேசி சவடால்: தி.மு.க.,வை தாக்கிய இ.பி.எஸ்.
-
பிளாக் அவுட் பயிற்சியில் இந்திய ராணுவம்; அச்சத்தில் பாகிஸ்தான்
-
தோல்விக்கு தோனி காரணமா
-
'கேலோ' வாலிபால்: தமிழகம் கலக்கல்