ஆட்டுக்கறி குழம்பில் தேரை ஹோட்டலுக்கு ௶'சீல்' வைப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, 'நாவலடி கொங்குநாடு' உணவகம் இயங்குகிறது. இங்கு, நேற்று முன்தினம் இருவர் மதிய உணவு சாப்பிட சென்றனர்.

அசை உணவை, ஆர்டர் செய்து சாப்பிட்டபோது, சாதத்திற்கு சுடசுட மட்டன் குழம்பு பரிமாறப்பட்டது. குழம்பில் மட்டன் கறியுடன், தவளை வகையைச் சேர்ந்த தேரை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதை வீடியோவாக பதிவு செய்ததுடன், ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து புறப்பட்டனர்.

சாப்பிட வந்தோரால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. அவர்களின் உத்தரவையடுத்து, பூந்தமல்லி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன், நேற்று அந்த உணவகத்திற்கு சென்று விசாரித்தார்.

உணவக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி, உணவு விற்பனைக்கு தடை விதித்ததுடன், உணவகத்தை பூட்டி 'சீல்' வைத்தார்.

Advertisement