யோகா குரு பாபா சிவானந்த் 128 வது வயதில் மரணம்

வாரணாசி: பத்ம ஸ்ரீ விருது பெற்றவரும், யோகா குருவுமான பாபா சிவானந்த், 128, உடல்நலக் குறைவால் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று முன்தினம் இரவு காலமானார். பாபா சிவானந்த், யோகா மற்றும் ஆன்மிகத்துக்கு சிறப்பான பங்களிப்பு அளித்தவர்.
அவரது சேவையை கவுரவிக்கும் வகையில், 2022ல் மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. பாபா சிவானந்த் மறைவுக்கு, பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'யோகா குரு சிவானந்த் பாபாஜியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. யோகா மற்றும் தியானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு' என, தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement