சைவநெறி விருது வழங்கும் விழா

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் தமிழக சிவ பக்தர்கள் குழு சார்பில் சைவ நெறி விருது வழங்கும் விழா நடந்தது.
ஒட்டன்சத்திரத்தை மாநில தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் உள்ள சிவனடியார்களை ஒன்றிணைத்து சைவத் தொண்டுகளை தமிழக சிவபத்திர குழு செய்து வருகிறது. மாதம் ஒருநாள் ஒரு திருத்தல யாத்திரையாக தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு உட்பட பன்னிரு திருமுறைகளிலும் குறிப்பிடப்பட்ட சைவநெறி மற்றும் சைவ ஆகமங்களை பின்பற்றி பூஜை நடைபெற்று வரும் கோயில்களுக்கு தலயாத்திரை செல்கின்றனர். அக்கோயில்களுக்கு உரிய திருமுறைகளை ஓதி வழிபாடுகள் செய்து வருகின்றனர். 3 ஆண்டுகளாக தொடர்ந்து பன்னிரு திருமுறைகளிலும் குறிப்பிடப்பட்ட கோயில்களுக்கு சென்று யாத்திரையை நிறைவு செய்த அடியார்களுக்கு 'திருமுறை திருத்தல செல்வர்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி, 36 சிவனடியார்களுக்கு திண்டுக்கல் காந்திகிராம பல்கலை., துணைவேந்தர் பஞ்சநதம் சான்றிதழ்கள் வழங்கினார். அவருக்கு'சைவ சித்தாந்த மாமணி' விருதை மாநில தலைவர் விஸ்வரத்தினம் வழங்கினார். சமயக்குரவர்கள் திருப்பாதம் பொறிக்கப்பட்ட சடாரி மற்றும் பன்னிரு திருமுறைகளும் கயிலாய வாத்தியம் இசைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் நால்வர் திருவடி தீட்சை வழங்கப்பட்டது. சிவபக்தர் சிவக்கதிவேல் நன்றி கூறினார்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை