மத்திய அமைச்சர் நட்டாவுக்கு பழுதடைந்த வாகனம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான நட்டா, தமிழகம் வந்தபோது, சமீபத்தில் வேலுார் தங்கக்கோவிலுக்கு சென்று திரும்பினார். அவர் பயணம் செய்த கார்.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் சென்றபோது, சக்கரத்தில் இருந்த அலாஸ் டிஸ்க் கழன்று, ரயில் மீது மோதியது.
ஓட்டுநரின் திறமையால் மத்திய அமைச்சரும், நானும் உயிர் தப்பினோம். கோடிகளை இறைத்து நிரப்பிய நவீன உபகரணங்களுடன் பளபளக்கும் பாதுகாப்பு வாகனத்தில் பயணிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய அமைச்சர்களுக்கு உரிய பாதுகாப்பு வாகனங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை என, தெரியாதா?
அதிர்ஷ்டவசமாக, மத்திய அமைச்சருக்கு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. மத்திய அமைச்சர் நட்டாவுக்கு, தமிழக அரசு இம்முறை வழங்கிய வாகனம் மிகவும் பழமையானது; பாதுகாப்பற்றது.
இது, ஆளும் தி.மு.க., அரசுக்கு தெரிந்தே நடக்கிறதா அல்லது அரசின் மெத்தனப்போக்கா; அலட்சியமா; என, கேள்வி எழுகிறது.
இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு வாகனங்களின் தரத்தை உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!