கோவை -- நாகர்கோவில் ரயில் பகுதி ரத்து சிறப்பு ரயில் அறிவிப்பு

விருதுநகர்: மதுரை கோட்டத்தில் கொடை ரோடு -- வாடிப்பட்டி இடையே பராமரிப்புப் பணி காரணமாக கோவை -- நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மே 31 வரை (வியாழன் தவிர்த்து) தினமும் காலை 8:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் (16322) மதியம் 1:30 மணிக்கு திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படும். திண்டுக்கல் -- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வியாழக்கிழமை வழக்கம் போல் நாகர்கோவில் வரை இயக்கப்படும். மறுமார்க்கம் நாகர்கோவில் -- கோவை ரயில் (16321) வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்



பயணிகளின் வசதிக்காக இன்று (மே 5) முதல் திண்டுக்கல் ---- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன், வியாழன் தவிர்த்து தினமும் மதியம் 3:45 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06322), கொடை ரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இரவு 9:05 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

Advertisement