ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

1

ராமேஸ்வரம்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர்.

அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து தீர்த்த கடலில் புனித நீராடினர்.

பின்னர் கோயில் வளாக 22 தீர்த்தங்களில் நீராடிவிட்டு சுவாமி, அம்மனை தரிசித்தனர்.

பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது.

Advertisement