குடிநீர் வாரியம் தோண்டிய பள்ளத்தில் விழுந்த முதியவர் பலி

ஆவடி: ஆவடி அடுத்த மிட்னமல்லி, பாலவேடு பிரதான சாலையைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 70; டெய்லர். இவர், கடந்த 1ம் தேதி இரவு, டி.வி.எஸ்., எக்ஸல் ஸ்கூட்டரில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அம்பேத்கர் தெரு அருகே வளைவில் சென்றபோது, சாலையில் குடிநீர் வாரிய பணிக்காக தோண்டப்பட்ட 5 அடி பள்ளத்தில் ஸ்கூட்டருடன் விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

சாலையில் வெளிச்சம் இல்லாத பகுதியில், போதிய பாதுகாப்பின்றி பள்ளம் தோண்டி வைத்ததே, விபத்துக்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர்.

Advertisement