கோயம்பேடில் போன் பறித்தவர் கைது

கோயம்பேடு: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார், 28; லோடு வேன் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு, லோடு வேனில் முள்ளங்கி ஏற்றி, கோயம்பேடு சந்தைக்கு வந்தார்.

பின், முள்ளங்கியை கடையில் இறக்கி விட்டு துாங்கினார். நேற்று அதிகாலை, மர்ம நபர் ஒருவர், சதீஷ் குமாரின் மொபைல் போனை திருடி தப்பினார்.

கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது, அரியலுார் மாவட்டம் கற்றக்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், 22, என, தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து மொபைல் போனை மீட்டனர்.

Advertisement