ஊர்க்காவல் படையினர் 51 பேருக்கு பாராட்டு

ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படை வீரர்களில், கடந்த 2024ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, திருமுல்லைவாயலில் உள்ள போலீஸ் கன்வென்ஷன் ஹாலில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்,இரவு ரோந்து, முக்கியபாதுகாப்பு மற்றும் தேர்தல் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றிய வீரர்களை பாராட்டினார்.

பின், 2024ம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய, 22 வீரர்கள் மற்றும் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 29 வீரர்கள் என மொத்தம் 51 வீரர்களுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

தொடர்ந்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. ஆவடி துணை கமிஷனர் ஐமன் ஜமால் உட்பட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement