மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலப்பானையூரை சேர்ந்த விவசாயி சுப்புலெட்சுமி 68, தாக்கிவிட்டு தங்க தோடை பறித்து சென்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் நீரஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலப்பானையூரை சேர்ந்த சுப்புலட்சுமி 68, விவசாய நிலத்தில் மிளகாய் பழம் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞர் சுப்புலெட்சுமி தலையில் தாக்கிவிட்டு காதில் அணிந்திருந்த 4 கிராம் தங்கத்தோடு பறித்துச் சென்றுள்ளார். பின்பு 2 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த நிலையில் சுப்புலெட்சுமி கிராமமக்களிடம் தகவல் தெரிவித்தார்.

அதன்பிறகு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளஞ்செம்பூர் போலீசார் தேடி வந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்தாஸ் மகன் நீரஜ்குமார் 20, திருடி சென்றது தெரியவந்தது.

கடலாடி இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அவரை கைது செய்தார்.

Advertisement