அத்துமீறி கொட்டும் குப்பையால் குடிநீர் வாரிய இடத்தில் சீர்கேடு

அயனாவரம்: அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட வில்லிவாக்கம், நியு ஆவடி சாலை உள்ளது. அயனாவரம் அருகில் காலியாக உள்ள வாரிய இடத்தில், பூமிக்கு அடியில் குடிநீர் வாரியத்தின் ராட்சத குழாய் 3 கி.மீ., துாரம் செல்கிறது.
இச்சாலையில், வாரியத்திற்கு சொந்தமான இடமான, வில்லிவாக்கம், ஐ.சி.எப்., உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, மீதமுள்ள இடங்கள் அப்படியே விடப்பட்டன.
மேலும், காலி இடமாக இருப்பதால் அங்கு குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
அயனாவரம் பகுதியில் உள்ள சக்கரவர்த்தி நகர், தந்தை பெரியார் நகர் மற்றும் காமராஜர் தெருக்களுக்கு செல்ல, நியூ ஆவடி சாலையை கடந்து இணைப்பு பாலம் வழியாக செல்ல வேண்டும்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இடத்தில், குப்பை கழிவு தேங்கி இருப்பதால், பல ஆண்டுகளாக சுகாதார சீர்கேடு நீடிக்கிறது. நோய் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
வாரியத்திற்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தும், அத்துமீறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!