தடைக்காலம் எதிரொலி; வெளி மாநில மீன்கள் விற்பனை

கடலுார்; கடலுாரில் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வெளிமாநில மீன்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டன. கடலுார் துறைமுகத்தில் இருந்து ஏராளமான படகுகளில் கடலில் சென்று மீன் பிடித்து வந்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது மீன் இனப்பெருக்க காலமாக இருப்பதால் மீன் வளத்தை பெருக்கும் நோக்குடன் கடலில் இழு வலை உதவியால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறிய படகுகளில் மீன் பிடித்து விற்பனை செய்கின்றனர். மீன் பிடி தடை காரணமாக அருகில் உள்ள கேரளா, ஆந்திரா, மாநிலங்களில் இருந்து மீன்கள் வரவழைக்கப்பட்டு நேற்று விற்பனை நடந்தது. இதனால் வழக்கமான விலையை விட கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் கூடுதல் விற்பனையானது. குறிப்பாக, பன்னிசாத்தான், கொடுவா, சங்கரா போன்ற மீன்கள் அதிகளவு விற்பனையாகின.

Advertisement