சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பரிதாப பலி

பீஜிங்: சீனாவின் குய்சோவு மாகாணத்தில் 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் குய்சோவு மாகாணத்தில் பலத்த காற்று வீசியதால் படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து படகில் பயணம் செய்த 84 பேர் நீரில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மே 1-5 வரை சீனாவின் மே தின விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரே படகில் அதிகமானவர்கள் பயணம் செய்தது விபத்திற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
05 மே,2025 - 18:19 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி ப்ரீத்தம் சிங்? யார் இவர் தெரியுமா?
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அவசர கொள்முதல்; இக்லா-எஸ் ஏவுகணையின் சிறப்புகள் இதோ!
-
ஈரோடு சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் மே 20 முதல் தொடர் உண்ணாவிரதம்: அண்ணாமலை அறிவிப்பு
-
பாகிஸ்தான் ராணுவத்தை புரட்டி அடிக்கும் பலுச் விடுதலை ராணுவம்!
-
பிரீமியர் லீக் போட்டி:டில்லி அணி பேட்டிங்
-
பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை: ராகுல் பங்கேற்பு!
Advertisement
Advertisement