பயங்கரவாதிகளுக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி; ஆற்றில் உடல் கண்டெடுப்பு

5

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட நபர், போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி ஓடிய போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தானின் லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் 26 டூரிஸ்ட்களை சுட்டு கொன்று வெறியாட்டம் நடத்தினர். அந்த பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். உள்ளூர் நபர்களின் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியாது என்ற கோணத்திலும் விசரணை நடந்தது.


அதன் அடிப்படையில், பயங்கரவாதிகளுக்கு உதவியாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், இம்தியாஸ் அகமது என்ற நபரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு உடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பயங்கரவாதிகளின் மறைவிடத்தை காட்டுவதாக கூறிய அகமது, பாதுகாப்பு படையினரிடம் இருந்து எஸ்கேப் ஆன போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: லஷ்கர் பயங்கரவாதிகளின் மறைவிடம் குறித்து தனக்கு தெரியும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். மறைவிடத்தை காட்டுவதாக அவர் அழைத்து சென்றார். அந்த நேரத்தில் திடீரென வைஷோவ் ஆற்றில் குதித்து நீந்தி தப்ப முயன்றார். ஆனால், ஆற்று நீரின் வேகத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார், என்றனர்.


பாறைகள் நிறைந்த அந்த ஆற்றில், இம்தியாஸ் அகமது திடீரென குதித்து தப்ப முயல்வது, நீச்சல் அடித்து வெளியெற முடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement