பயத்தில் நடுங்கும் பாகிஸ்தான்; மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி நாடகம்!

7

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதனால், பாகிஸ்தான் மீது அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைக்கு நம் நாடு ஆயத்தமாகி வருகிறது.


இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் 'சிந்து போர் பயிற்சி' என்ற பெயரில் அப்தாலி என பெயரிடப்பட்ட ஏவுகணை சோதனையை நடத்தியது.

இந்த ஏவுகணை, 450 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது. கராச்சி அருகே உள்ள சோன்மியானி ஏவுகணை தளத்தில் நடந்த இந்த சோதனை, வெற்றி அடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று (மே 05) 2 நாட்களில் 2 வது முறையாக ஏவுகணை சோதனை செய்துள்ளது.


120 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் பத்தா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. பயப்படாமல் இருப்பது போல் காட்டிக் கொள்ளவும், உள்நாட்டு மக்களை ஏமாற்றவும், இந்த சோதனையை நடத்தியுள்ளது அந்நாட்டு ராணுவம்.

அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

Advertisement