செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி: டில்லி செங்கோட்டைக்கு உரிமை கொண்டாடிய பேராசை பெண்ணுக்கு, ''செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா?'' என சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
'டில்லியில், முகலாயர் ஆட்சிக் காலத்தில், 17ம் நுாற்றாண்டில் செங்கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை சுமார் 254 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எல்லாப் பக்கங்களிலும் உயரமான சுவர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த கோட்டைக்கு பல நுழைவாயில்கள் உள்ளன. தற்போது இந்த கோட்டையின் பெரும்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், கடைசி முகலாய அரசர் பகதுார் ஷா ஜாபரின் வாரிசு என்று கூறிக்கொண்டு சுல்தானா பேகம் என்ற பெண், 'டில்லி செங்கோட்டை எனக்குத்தான் சொந்தம்' என்று கோரி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று (மே 05) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரித்தார்.
அப்போது அவர், ''ஏன், செங்கோட்டை மட்டும் போதுமா, பதேபூர் சிக்ரி எல்லாம் வேண்டாமா, அவற்றை எல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்? '' என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார். பின்னர், தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று கூறி தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டில்லி ஐகோர்ட் பெஞ்ச் கடந்தாண்டு டிஸ்மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.










மேலும்
-
தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பவன் கல்யாண் வலியுறுத்தல்
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
-
எதற்கு இந்த விளம்பரம்?சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
-
பயங்கரவாதிகளுக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி; ஆற்றில் உடல் கண்டெடுப்பு
-
சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பரிதாப பலி
-
பயத்தில் நடுங்கும் பாகிஸ்தான்; மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி நாடகம்!