நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்

சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67, உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (மே 05) காலமானார்.
தமிழ் சினிமாவில் மூத்த காமெடி நடிகர் கவுண்டமணி, 85. பாரதிராஜாவின் '16 வயதினிலே' படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். செந்தில் உடன் இவர் பண்ணிய காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. அன்றைய ரஜினி, கமல் துவங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை நடித்து வருவதோடு ஹீரோவாகவும் அவ்வப்போது நடித்து வருகிறார்.
கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67. அந்தகாலத்திலேயே இவரை காதல் திருமணம் செய்தார். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று(மே 5) சென்னையில் காலமானார். கவுண்டமணி தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று மாலை அல்லது நாளை காலை நடக்கும் என தெரிகிறது.






மேலும்
-
தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல்
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
-
எதற்கு இந்த விளம்பரம்?சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
-
பயங்கரவாதிகளுக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி; ஆற்றில் உடல் கண்டெடுப்பு
-
சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பரிதாப பலி
-
பயத்தில் நடுங்கும் பாகிஸ்தான்; மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி நாடகம்!