பி.இ., படிக்க போறீங்களா? மே 7ல் விண்ணப்ப பதிவு துவக்கம்!

சென்னை: பி.இ., படிப்புகளுக்கு மே 7ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மே, 9ம் தேதி வெளியாக உள்ளது. இப்போது இருந்து மேற்படிப்புகள் தொடர்பாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த சூழலில், பி.இ., படிப்புகளுக்கு மே 7ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அன்று காலை 10 மணிக்கு விண்ணப்ப பதிவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் துவங்கி வைக்கிறார்.
ஜூன் 6ம் தேதி வரை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணையதளம் https://www.tneaonline.org/ வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பி.இ., படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த இணையதளத்தில் சென்று மே 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ், 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உள்ள இளநிலை பொறியியல் படிப்புக்களுக்கு ஒன்றரை லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணைய வழியில் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன.




மேலும்
-
போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்குங்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
-
ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்
-
பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்தணும்: பொருளாதார நெருக்கடி கொடுக்க இந்தியா வலியுறுத்தல்
-
இந்திய இணையதளத்தை கைப்பற்ற முயற்சி; அடங்காத பாகிஸ்தான் ஹேக்கர்கள்!
-
வண்டல் மண் எடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: பொதுப்பணித்துறை ஊழியர் கைது!
-
நிலநடுக்கத்தால் லேசாக அதிர்ந்த பாகிஸ்தான்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு