நிலநடுக்கத்தால் லேசாக அதிர்ந்த பாகிஸ்தான்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்தனர்.



ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகவும், 10 கி.மீ., ஆழத்திலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.


இந்த விவரத்தை அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. மிதமான நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்ற விவரங்கள் வெளியாகவில்லை.


பாகிஸ்தானில் கடந்தாண்டு மட்டும் கிட்டத்தட்ட 167 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் குறைந்த அளவிலான அதிர்வுகள் கொண்டவையாகும். அதாவது ரிக்டர் அளவுகோலில் 1.5 மற்றும் அதற்கு மேலாக பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement