பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்தணும்: பொருளாதார நெருக்கடி கொடுக்க இந்தியா வலியுறுத்தல்

6

புதுடில்லி: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 'பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்த நிறுத்த வேண்டும்' என இந்தியா வலியுறுத்தியுள்ளது.


@1brபயங்கரவாத தாக்குதல் நடத்திய நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை மத்திய அரசு தொடர்கிறது. அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு, தபால் மற்றும் பார்சல்களுக்கு அனுமதி இல்லை என, மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


இந்த சூழலில், மே 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை மிலனில் நடைபெற உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) ஆளுநர்கள் குழுவின் 58வது ஆண்டு கூட்டத்திற்கான நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் இந்திய அதிகாரிகள் குழுவிற்கு சீதாராமன் தலைமை தாங்குகிறார்.


இந்நிலையில் இத்தாலி சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இத்தாலி பிரதிநிதி ஜியான்கார்லோ ஜியோர்கெட்டிக்யை சந்தித்து பேசினார். அப்போது அவர் 'பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்த நிறுத்த வேண்டும்' என வலியுறுத்தியதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடனான சந்திப்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

Advertisement