போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்குங்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

10


புதுடில்லி: உடனடியாக போர் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வருகிறது.
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த இலக்கின் மீதும் தாக்குதல் நடத்தும் சுதந்திரத்தை, முப்படைகளுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.


இந்நிலையில், போர் பாதுகாப்பு தொடர்பான ஒத்திகைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களில் மே 7ம் தேதி போர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும். விமான தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புதல் சரியாக வேலை செய்கிறதா என சரி பார்க்க வேண்டும்.போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பொதுமக்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.


'கிராஷ் பிளாக் அஷட்' நடைமுறைகள் தொடர்பாகவும், முக்கிய கேந்திரங்கள் பாதுகாப்பு தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.மீட்பு திட்டங்கள் தொடர்பான ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வட மாநிலங்களில் ஏற்கனவே, சில போர் ஒத்திகைகள் நடந்து வருகின்றன. தற்போது மற்ற மாநிலங்களுக்கும் இத்தகைய அறிவிப்பை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

Advertisement