பாதுகாப்புத்துறை செயலருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை செயலரை அழைத்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த ஏப்.,22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வரும் மத்திய அரசு, முதற்கட்டமாக, வான்பரப்பு மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், எந்த நேரமும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்குடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்திய ராணுவத்தினர் அடுத்தடுத்து ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில், பிரதமர் மோடியின் அடுத்தடுத்த இந்த சந்திப்பு பாகிஸ்தானை மேலும் அச்சமடையச் செய்துள்ளது.



மேலும்
-
போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்குங்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
-
ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்
-
பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்தணும்: பொருளாதார நெருக்கடி கொடுக்க இந்தியா வலியுறுத்தல்
-
இந்திய இணையதளத்தை கைப்பற்ற முயற்சி; அடங்காத பாகிஸ்தான் ஹேக்கர்கள்!
-
வண்டல் மண் எடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: பொதுப்பணித்துறை ஊழியர் கைது!
-
நிலநடுக்கத்தால் லேசாக அதிர்ந்த பாகிஸ்தான்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு