இன்று 11, நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 05) 11 மாவட்டங்களிலும், நாளை (மே 06) 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 06)
நீலகிரி,
கோவை,
தேனி,
திண்டுக்கல்
ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
05 மே,2025 - 16:10 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்தணும்: பொருளாதார நெருக்கடி கொடுக்க இந்தியா வலியுறுத்தல்
-
இந்திய இணையதளத்தை கைப்பற்ற முயற்சி; அடங்காத பாகிஸ்தான் ஹேக்கர்கள்!
-
வண்டல் மண் எடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: பொதுப்பணித்துறை ஊழியர் கைது!
-
நிலநடுக்கத்தால் லேசாக அதிர்ந்த பாகிஸ்தான்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
-
பணத்துக்காக பாட்டியை கழுத்தறுத்து கொன்ற பேரன்; கோவையில் அதிர்ச்சி
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
Advertisement
Advertisement