நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் எரிந்த நிலையில் பண மூட்டை கிடந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் அமைத்த மூவர் குழு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
கடந்த மார்ச் 14 அன்று நீதிபதி வர்மாவின் டில்லி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.
டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவின் முதற்கட்ட விசாரணை முடிவில், நீதிபதி வர்மாவை நீதித்துறை பணியில் இருந்து நீக்குதல், அலகாபாத் ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு, அமைக்கப்பட்டது.
இந்த குழு மே 3 அன்று தனது அறிக்கையை மே 4 அன்று தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தது.
இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








மேலும்
-
அபராதம் விதிக்காமல் லஞ்சம்: போலீஸ் எஸ்.எஸ்.ஐ., உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'
-
நிலம் அளப்பதற்கு லஞ்சம்; வி.ஏ.ஓ., தலையாரி இருவரும் கைது
-
ராஜஸ்தானுக்கு முதல் தங்கம்: 'கேலோ இந்தியா' துப்பாக்கி சுடுதலில்
-
சென்னை அணியில் உர்வில் படேல்
-
கோப்பை வென்றது இந்தியா: மாற்றுத்திறனாளி 'டி-20' கிரிக்கெட்டில்
-
இந்திய அணி 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில்