பணத்துக்காக பாட்டியை கழுத்தறுத்து கொன்ற பேரன்; கோவையில் அதிர்ச்சி

2

கோவை: கோவையில் பணத்துக்காக பாட்டியை பேரனே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


கோவை சுந்தராபுரம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மனோன்மணி, 80. இவரது மகன் முருகன் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.


அவரது மரணத்துக்கான இழப்பீடுத் தொகை சில மாதங்களுக்கு முன் அவரது வாரிசுதாரர்களுக்கு வந்தது. அந்த வகையில் முருகனின் தாயார் மனோன்மணிக்கும் பணம் வந்தது.


அந்த பணத்தை தனக்கு கொடுக்குமாறு முருகன் மகன் சிவக்குமார், 25,பாட்டியிடம் கேட்டுள்ளார். ஆனால், மனோன்மணியோ அதை தர மறுத்தார்.


இந்நிலையில் இன்று (மே 5) மதியம் பாட்டியை தேடி வந்த பேரன் சிவக்குமார் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தர மறுத்த பாட்டியை மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தறுத்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கம்பவத்தை அறிந்த போலீசார் தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர்.

Advertisement