அபராதம் விதிக்காமல் லஞ்சம்: போலீஸ் எஸ்.எஸ்.ஐ., உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'

திருப்பூர்: வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்காமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கிய போலீசார் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், வஞ்சிபாளையத்தில் திருமுருகன் பூண்டி போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் காரை ஓட்டி வந்த வாகன ஓட்டி ஒருவருக்கு எவ்வித அபராத தொகையும் விதிக்காமல், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுப்பியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, எஸ்.எஸ்.ஐ., மோகன், முதல்நிலை போலீஸ்காரர் கோபிநாத் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் பிரேம்குமார் ஆகியோரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அரசுக்கு எதிராக தர்ணா அரசு வளாகத்தில் விருந்தா? பா.ஜ., குற்றச்சாட்டு
-
விளம்பரத்துக்காக மனு உச்ச நீதிமன்றம் அதிருப்தி
-
வாய்க்கொழுப்பால் சிக்கிய 'யு டியூப்' பிரபலங்கள்
-
5 எழுத்தாளர்களின் நுால் நாட்டுடமை ரூ.50 லட்சம் வழங்கினார் முதல்வர்
-
தீர்ப்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
-
காமராஜர் அரங்க மைதானத்தில் சட்டவிரோத செயல்; இரவோடு இரவாக சுற்றுச்சுவர் கட்டிய காங்கிரசார்
Advertisement
Advertisement