செங்கை மாவட்டத்தில் 200 ஏரிகளை துார் வார ரூ.16.10 கோடி ஒதுக்கீடு
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் சிறு பாசன ஏரிகள் துார் வாருதல் திட்டத்தில், 200 ஏரிகளை துார் வாரி சீரமைக்க, 16.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில், 620 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் நீர் பாசனம் வாயிலாக, விவசாய நிலங்களில் நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் இருப்பதால், துார் வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாய நலன் காக்கும் கூட்டங்களில், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் பின், ஏரிகளை ஆய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூடுதல் கலெக்டர், கலெக்டர் ஆகியோருக்கு பரிந்துரை செய்தனர்.
ஏரிகளை துார் வாரி சீரமைக்க, ஊரக வளர்ச்சித் துறையினர், அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து, சிறுபாசன ஏரிகள் துார் வாரும், குடிமராமத்து திட்டத்தில், ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 200 சிறுபாசன ஏரிகளை துார் வாரி சீரமைக்க, 16.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.
இப்பணிகளை செயல்படுத்த, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மாவுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
அதன் பின், 200 ஏரிகளையும் துார் வாரி சீரமைக்க, கடந்த ஏப்., 16ம் தேதி 'டெண்டர்' விடப்பட்டது. பணிகளை, தனியார் ஒப்பந்த நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணைகளை, கடந்த 20ம் தேதி, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.
பருவ மழைக்கு முன், அனைத்து பணிகளை முடிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
* நிபந்தனைகள்
ஏரி பணி துவங்கும் முன், பெயர் பலகை மற்றும் திட்டத்தின் பெயர், ஆண்டு, பணியின் பெயர் எழுத வேண்டும். ஒவ்வொரு சிறுபாசன ஏரிக்கும் விவசாய சங்கம், பயனாளர் சங்கம் ஏற்படுத்த வேண்டும். ஏரிக்கரைகளில் பனை மரங்கள் நடப்பட வேண்டும். வெளிப்புற கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நாட்டு இன மரங்கள் நடலாம். குறைந்தபட்சம் 5 முதல் 6 அடி உயரமுள்ள மரக்கன்றுகளை நட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள், ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றியம் சிறுபாசன ஏரிகள் ரூ.கோடிஅச்சிறுபாக்கம் 43மதுராந்தகம் 56 4.34சித்தாமூர் 32 2.99லத்துார் 19 1.13திருக்கழுக்குன்றம் 7 0.59திருப்போரூர் 18 1.50காட்டாங்கொளத்துார் 25 2.27மொத்தம் 200 16.10
மேலும்
-
23 முதல் மணல் லாரிகள் ஓடாது உரிமையாளர்கள் அறிவிப்பு
-
வன கிராம மக்கள் உதவியுடன் நக்சலைட் வேட்டை
-
பயங்கரவாதிகளுக்கு உதவிய இளைஞர்; விசாரித்தபோது ஆற்றில் குதித்து பலி
-
தடை செய்யப்பட்ட 'பி.எஸ்., 4' வாகனம் பதிவு செய்த அதிகாரிகள் மீது வழக்கு
-
பொறுப்பு சார்-பதிவாளர்களுக்கு கிடுக்கி போடுகிறது பதிவுத்துறை
-
கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.250 கோடி பாக்கி; விவசாயிகள் தவிப்பு