இரும்புலி ஊராட்சி தலைவருக்கு மத்திய அரசு பயிற்சி

சித்தாமூர்,இரும்புலி ஊராட்சி தலைவருக்கு, புதுடில்லியில் உள்ள மத்திய அரசு பயிற்சி நிறுவனத்தில், தலைமைத்துவம் மற்றும் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான இந்திய பொது நிர்வாகவியல் நிறுவனம் சார்பாக அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரும்புலி ஊராட்சி தலைவர் சூரியகலா, மேலமையூர் ஊராட்சி தலைவர் ஹெலன் சந்தியா உள்ளிட்ட ஆறு நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, புதுடில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாகவியல் நிறுவனம் சார்பில், தலைமைத்துவம் மற்றும் மேலாண்மை குறித்து, ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஏப்., 28 முதல் கடந்த 2ம் தேதி வரை நடந்த இந்த பயிற்சியில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு, வழிகாட்டல், முடிவெடுத்தல், ஊக்குவித்தல், சிக்கலைத் தீர்க்கும் திறன், திட்டமிடல், நேரம் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திறன்களை மேம்படுத்துவது குறித்து, இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும்
-
23 முதல் மணல் லாரிகள் ஓடாது உரிமையாளர்கள் அறிவிப்பு
-
வன கிராம மக்கள் உதவியுடன் நக்சலைட் வேட்டை
-
பயங்கரவாதிகளுக்கு உதவிய இளைஞர்; விசாரித்தபோது ஆற்றில் குதித்து பலி
-
தடை செய்யப்பட்ட 'பி.எஸ்., 4' வாகனம் பதிவு செய்த அதிகாரிகள் மீது வழக்கு
-
பொறுப்பு சார்-பதிவாளர்களுக்கு கிடுக்கி போடுகிறது பதிவுத்துறை
-
கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.250 கோடி பாக்கி; விவசாயிகள் தவிப்பு