காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு

சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67, உடல் நலக்குறைவால், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார்.
கடந்த, 1973ல் சாந்தியை காதலித்து திருமணம் செய்தார் கவுண்டமணி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என, இரண்டு மகள்கள் உள்ளனர். சாந்தியின் மறைவுக்கு, நடிகர் சத்யராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச்சடங்குகள், பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று நடக்கின்றன.
பெருமாயி மறைவு
அதேபோல, பாரதிராஜா இயக்கிய, 'தெக்கத்திப்பொண்ணு' தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் பெருமாயி, 73.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த அன்னம்பாரிபட்டியை சேர்ந்த இவர், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் படங்களில், கிராமத்து பாட்டியாக நடித்துள்ளார்.
மாரடைப்பால் இவர் நேற்று மரணமடைந்தார். பெருமாயிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.