ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி பணம் திருட்டு

வியாசர்பாடி,
வியாசர்பாடி, 15வது பிளாக்கைச் சேர்ந்தவர் திலகவதி, 21. இவர், பெரியார் நகரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக உள்ளார்.

இவரது இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டு நேற்று முன்தினம் மாயமானது. இந்நிலையில், வியாசர்பாடி, எஸ்.எம்.நகர் பிரதான சாலையில் உள்ள ஆக்சிஸ் ஏ.டி.எம்., மையத்தில், இவரது ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 25,000 ரூபாயை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். திலகவதி அளித்த புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement