மாணவரின் பூணுாலை அகற்றிய 'நீட்' தேர்வு மைய ஊழியர்கள் கைது
கலபுரகி: கலபுரகியில் நீட் தேர்வு எழுதச் சென்ற, மாணவரின் பூணுாலை அகற்றிய விவகாரத்தில், தேர்வு மைய ஊழியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடந்தது. கர்நாடகாவின் கலபுரகியில் செயின்ட் மேரி பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இம்மையத்திற்கு, தேர்வு எழுத ஸ்ரீபாத் பாட்டீல் என்ற மாணவர் சென்றார்.
அவர் அணிந்திருந்த பூணுாலை, தேர்வு மைய ஊழியர்கள் அகற்றினர். அகற்றப்பட்ட பூணுாலை ஸ்ரீபாத் பாட்டீல், தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றார்.
இதை கண்டித்து தேர்வு மையம் முன், பிராமணர் சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த ஸ்ரீபாத் பாட்டீலுக்கு, தேர்வு மையம் முன் வைத்தே புதிய பூணுாலும் அணிவிக்கப்பட்டது.
தன்னை வற்புறுத்தி பூணுாலை அகற்றியதாக, தேர்வு மைய ஊழியர்கள் சரண்கவுடா, கணேஷ் மீது ஸ்ரீபாத் பாட்டீல் போலீசில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருவர் கைதாகி இருப்பதை, கலபுரகி போலீஸ் கமிஷனர் சரணப்பாவும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதற்கிடையில் தேர்வு மையங்களுக்கு பூணுால் அணிந்து செல்வது தொடர்பாக, தகுந்த வழிகாட்டுதல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் அகில கர்நாடக பிராமண மகாசபா, பொது நல மனுவை நேற்று தாக்கல் செய்தது.
மேலும்
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்